செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : புதன், 6 நவம்பர் 2019 (11:29 IST)

பாலிடெக்னிக் மாணவர் சுடப்பட்ட விவகாரம்: தலைமறைவான விஜய் நீதிமன்றத்தில் சரண்

சென்னை அருகே பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது நண்பர் விஜய்யை போலீஸார் தேடி வந்த நிலையில் தற்போது நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கடமங்கலம் பகுதியை சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் முகேஷ், நேற்று அவரது நண்பர் விஜய் வீட்டில் சுடப்பட்டார். தலையில் குண்டடி பட்ட முகேஷை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் தலைமறைவான விஜய்யை போலீஸார் தேடி வந்த நிலையில், தற்போது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜய் சரணடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.