திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 25 மே 2016 (19:29 IST)

நாளை மறுநாள் வெளியாகிறது பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள்

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
மே 27ஆம் தேதி பாலிடெக்னிக்கின் தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இது சம்பந்தமாக தொழில்நுட்பக் கல்வி இயக்க தேர்வு வாரிய தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
"தற்பொழுது பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்திய ஏப்ரல் 2016 பட்டயத் தேர்விற்கான, தேர்வு முடிவுகள் www.tndte.com, http://intradote.tn.nic.in ஆகிய இணையதளங்களின் மூலம் 27-5-2016 அன்று வெளியிடப்படுகிறது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சில நாட்களுக்கு முன்பு பனிரெண்டம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இன்று காலை 10ஆம் வகுப்பு தேர்வுகளின் முடிவு வெளியானது.
 
இந்நிலையில் மே 27ஆம் தேதி, பாலிடெக்னிக் தேர்வு முடிகள் வெளியாக உள்ளது.