1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (12:05 IST)

இந்தியாவை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு! கைது செய்யப்பட்ட 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்!

Pollachi Case
பொள்ளாச்சி பாலியல் வழக்கு - கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 9 பேரும்  நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்படுகின்றனர்


 
கோவை மகளிர் நீதிமன்றத்தில்  பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. சபரிராஜன்,  திருநாவுக்கரசு,  வசந்தகுமார், சதீஷ்,   மணிவண்ணன், அருளானந்தம்,  ஹரோனிமஸ் பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

பாதிக்கப்பட்ட 8 பெண்கள் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில் கடத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது .

 
கடந்த ஒரு வருடமாக வீடியோ கான்பிரன்ஸிங்கில் விசாரணைக்கு 9 பேரும் ஆஜராகி வந்த நிலையில் , ஒரு வருடத்திற்கு பின்பு இன்று 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட இருக்கின்றனர்.

கடந்த 2021 ம் ஆண்டு சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் அதில் கூடுதல் ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களின் நகல்கள் கேட்டு ஒன்பது பேரும் மனு தாக்கல் செய்திருந்த  நிலையில், இன்று 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகின்றனர்.