திருப்பதியில் விடிய விடிய மழை: ஏழுமலையான் கோயில் முன்பு வெள்ளம்..!
திருப்பதியில் விடிய விடிய மழை பெய்ததை அடுத்து திருமலை ஏழுமலையான் கோவில் முன் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பக்தர்கள் கடும் அவசரத்தில் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவ மழை தொடங்கியதை அடுத்து தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பரவலாக மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது என்பதைக் காண்கிறோம்.
இந்த நிலையில் தமிழகத்தில், சென்னை உள்பட பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், ஆந்திராவிலும் மழை பெய்து வருவதாகவும், குறிப்பாக நேற்று இரவு திருப்பதியில் விடிய விடிய கனமழை பெய்ததால் ஏழுமலையான் கோவில் முன் வெள்ளம் சூழ்ந்து, தண்ணீர் தேங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் பக்தர்கள் கடும் அவசரத்தில் இருப்பதாகவும், திருமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தேவஸ்தானம் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், இன்னும் சில மணி நேரங்களில் இயல்பு நிலை திரும்பும் என்றும் கூறப்படுகிறது.
Edited by Mahendran