செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 25 மார்ச் 2024 (07:11 IST)

திமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்.. சுறுசுறுப்பாகும் தேர்தல் களம்..!

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் மார்ச் 20 முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரை சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்து வரும் நிலையில் இன்று முதல் அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதால் தேர்தல் களம் சுறுசுறுப்பாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் முதலமைச்சர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் தேர்தல் களமும் பரபரப்பாக உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்த முடித்தவுடன் வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தொடங்கி விடுவார்கள் என்பதால் இனி வரும் நாட்களில் தமிழகம் முழுவதும் தேர்தல் பரபரப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அதிமுக, திமுக, மட்டும் இன்றி விடுதலை சிறுத்தைகள், பாமக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர் என்பதும் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய அரசியல் கட்சிகள் மும்முரமாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva