1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 14 மார்ச் 2019 (20:05 IST)

பொள்ளாச்சி வழக்கில் போலீஸுக்கு கைமாறிய ரூ.60 லட்சம்? தனியார் செய்தி சேனல் தகவலால் சர்ச்சை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீஸாருக்கு ரூ.60 லட்சம் கைமாறியதாக செய்தி ஒன்று வெளியாகியிருப்பது இந்த வழக்கை மேலும் சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது. 
 
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக கிட்டதட்ட 200 பெண்களை மிரட்டி பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துள்ளனர்.
 
இந்த விவகாரம் தற்போது தமிழகத்தை உலுக்கியெடுத்துள்ளது. இவ்வழக்கில் போலீஸார் வசந்தகுமார், செந்தில், சதீஷ், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நாலவர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.
 
மேலும், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இன்று அதிரடியாக சிபிசிஐடி திருநாவுக்கரசின் வீட்டில் ரெட் நடத்தினர். இப்படி இருக்கையில் போலீஸாருக்கு ரூ.60 லட்சம் கைமாறியதாக பிரப்ல தனியார் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு, பொள்லாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பல பெண்கள் திருநாவுகரசு மற்றும் மூவரின் பிடியில் சிக்கியுள்ளனர். இதில் கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் அடக்கம். 
 
கைது செய்யப்பட்ட் குற்றாவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஸ்மார்ட்போனில் பல பெண்களின் வீடியோக்கள் உள்ளதாம். இந்த வீடியோக்கள் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களை கண்டறிந்து அவர்களிடம் வாக்குமூலம் பெற போலீஸார் முடிவுசெய்துள்ளனராம். 
 
ஆனால், இந்த வழக்கில் தனது பெயர் இணைக்கப்பட கூடாது என பாதிக்கப்பட்ட மருத்துவர் நினைத்துள்ளார். இதனால், போலீஸாருக்கு ரூ.60 லடசம் கைமாறியுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. இந்த செய்தி இந்த வழக்கை மேலும் சர்ச்சைகுள்ளாக்கியுள்ளது.