சைக்கிளில் சென்ற முதயவரை தாக்கிய காவலர்: வைரல் வீடியோ!
திருச்சியில் காவலர் ஒருவர் சாலையில் முதியர் ஒருவரை தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்சி மாநகர ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை ரவுண்டானா பகுதியில் சைக்கிளில் சென்ற முதியவர் மீது, அதே வழியில் மோட்டார் பைக்கில் வந்த காவலர் வாகனம் மோதியது.
அப்போது சைக்கிள் வந்த முதியவர் காவலரிடம் ஏதோ கூறிய நிலையில், ஆத்திரமடைந்த காவலர், பைக்கிலிருந்து இறங்கி முதியவரை தாக்கியுள்ளார். இது சம்மந்தமான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.