1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 மே 2023 (12:18 IST)

காவல்துறை சார்பு ஆய்வாளர் பணிக்கான தேர்வு அறிவிப்பு: கடைசி தேதி என்ன?

காவல்துறையில் சார்பு ஆய்வாளர் பணிக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் காவல்துறையில் சார்பாக பணிக்கான ஆட்கள் எடுக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. 
 
இந்த பணிக்கு தகுதி உள்ளவர்கள் ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் https://tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக மேற்கண்ட இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
காவல் நிலையங்களில் காவல்துறை ஆய்வாளர்களின் கீழ் சட்டம்- ஒழுங்கு, குற்றம் போன்ற பிரிவுகளின் கீழ் சார்பு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் தலைமைக் காவலர்கள், காவலர்கள் போன்றவர்களின் துணையுடன் குற்றங்கள் நடைபெறாமல் தடுத்தும், குற்றவாளிகளைக் கண்டறிந்து நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கவும் துணை புரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran