ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 20 ஏப்ரல் 2019 (13:54 IST)

கீழ்தரமான செயலில் ஈடுபட்டவர்களை தண்டிக்கனும் - ஹெச்.ராஜா

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் வாட்ஸ் அப்பில் ஒரு ஆடியோ பதிவால் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தின் போது போலீஸ் ஸ்டேசன் மற்றும் காவல்துறையின் வாகனங்களும் சேதமடைந்தன.
இந்த வன்முறை சம்பந்தமாக சுமார் 1000 பேரு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவ வெளியாகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள 50 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
 
இதனையடுத்து பொன்னமராவதியில் ஔள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடுமாறு மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி ஆணையிட்டுள்ளார்.
 
இந்நிலையில் பாஜக தேசிய தலைவர்  ஹெச்.ராஜா தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :
 
’’பொன்னமராவதியில் ஒரு குறிப்பிட்ட பிரிவு சமுதாய மக்களை இழிவாக பேசிய சமூக விரோதிகளை  காவல்துறை உடனடியாக கைது  செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுடன் உணர்வுப்பூர்வமாக இணைந்திருப்போம். சட்ட ரீதியில் போராடும் அதே நேரத்தில் அனைவரும் அமைதி காக்க வேண்டுகிறேன் ‘’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.