1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 செப்டம்பர் 2020 (15:11 IST)

அப்பாவா நடந்துக்குவார்னு நினைச்சேன்! மகளை சீரழித்த தந்தை! – தற்கொலைக்கு முயன்ற தாய்!

நாமக்கல் அருகே தனது மகளை கணவரே பாலியல் கொடுமை செய்ததை தாங்க முடியாமல் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் சேந்தமங்கலம் அருகே பட்டத்தையன்குட்டை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவரது மகள் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பரமநாதன் என்ற லாரி டிரைவரை திருமணம் செய்து கொண்டு மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார் அந்த பெண்.

தாயார் வேலைக்காக வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மகளை பரமநாதன் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வேலை முடிந்து வந்த தாயிடம் நடந்ததை சொல்லி கதறி அழுத்துள்ளார் அவரது மகள்.

தனது கணவனே மகளை இவ்வாறு செய்ததை தாங்கி கொள்ள முடியாத தாய் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த அவரது உறவினர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பரமநாதனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.