Daily Horoscope
✕

அணில் ஓடுறதால பவர் கட்டாம்.. என்ன விஞ்ஞானம்! – செந்தில் பாலாஜியை கலாய்த்த ராமதாஸ்

Written By Prasanth Karthick
Updated: செவ்வாய், 22 ஜூன் 2021 (14:36 IST)
தமிழகத்தில் மின்சார தடை ஏற்பட காரணம் மின்கம்பிகளில் அணில்கள் ஓடுவதால் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் தினம்தோறும் சில மணி நேரங்கல் மின்தடை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் மின்தடை குறித்து சமீபத்தில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ”கடந்த சில மாதங்களாக மின்வாரிய பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால், தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மின்கம்பிகளில் கொடிகள் படர்ந்துள்ளதாலும், அணில்கள் ஓடுவதாலும் மின்தடை ஏற்படுகிறது” என கூறியிருந்தார்.

அவரின் விளக்கத்தை விமர்சித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி - விஞ்ஞானம்.... விஞ்ஞானம்! சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ?” என கிண்டலாய் கேள்வி எழுப்பியுள்ளார்.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments