திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 11 செப்டம்பர் 2024 (20:40 IST)

22 மாதங்களுக்கு பின் மீண்டும் ராமேஸ்வரத்திற்கு ரயில்.. திறக்கப்படுகிறது புதிய பாலம்..!

rameshwaram
22 மாதங்களாக ராமேஸ்வரத்துக்கு ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ராமேஸ்வரத்துக்கு ரயில் போக்குவரத்து வரும் அக்டோபர் இரண்டாம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

ராமேஸ்வரம் - மண்டபம் இடையே புதிய பாலம் கடந்த சில மாதங்களாக கட்டப்பட்டு வந்த நிலையில் இந்த பாலத்தின் பணிகள் தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளது. இந்த பாலத்தை அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தில் பிரதமர் மோடி திறந்து வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதற்காக தமிழகம் வரவிருக்கும் பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் உள்ளிட்ட சில பகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதன் பின் புதிய பாம்பன் பாலம் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

வங்க கடலின் குறுக்கே சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. கப்பல் வரும்போது செங்குத்தாக தூக்கி இறக்கும் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட ரயில் பாலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாலத்தை ரயில்வே 535 கோடி ரூபாய் செலவில் கட்டி முடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva