செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (11:45 IST)

மீண்டும் வேஷ்டி கட்டும் பிரதமர் மோடி; மதுரையில் ”மோடி பொங்கல்”!

மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழாவிற்காக தமிழகம் வரும் பிரதமர் மதுரையில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கும் நிகழ்விற்காக பிரதமர் மோடி ஜனவரி 12 அன்று தமிழகம் வர உள்ளார். அதை தொடர்ந்து மதுரையில் தமிழகபாஜக நடத்தும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

”மோடி பொங்கல்” என்ற பெயரில் நடத்தப்பட உள்ள இந்த பொங்கல் நிகழ்ச்சியை மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகரில் நடத்த தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த தனிக்குழு அமைத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். மகாபலிபுரம் சீன அதிபர் சந்திப்பின்போது தமிழர்கள் போல் வேஷ்டி கட்டிய பிரதமர் மோடி, இந்த பொங்கல் நிகழ்ச்சியிலும் தமிழ் பாரம்பரியப்படி வேஷ்டி கட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.