திங்கள், 11 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 பிப்ரவரி 2024 (17:22 IST)

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் எப்போது கிடைக்கும்?

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதி நிறைவடையவுள்ளன. 
 
 மார்ச் 1ஆம் தேதி மொழிப்பாடத் தேர்வுடன் தொடங்கி, மார்ச் 22ஆம் தேதி வேதியியல் பாடத் தேர்வுடன் நிறைவடையும். இடைப்பட்ட நாட்களில் கணிதம், கணினியல், வணிகவியல், வேளாண்மை, ஹோம் சயின்ஸ் உள்ளிட்ட பல்வேறு பாடங்களின் தேர்வுகள் நடைபெறவுள்ளன 
 
இந்த நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்து வெளியாகி உள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய பகுதிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களுடைய தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
எனவே பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மேற்கண்ட இணையதளம் சென்று வரும் 20ஆம் தேதி முதல் தங்களது ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran