விஷ ஊசி போட்டு கொன்று இருக்கலாம்: கர்ப்பிணிப் பெண் கேள்விக்கு என்ன பதில் உயர் திரு அரசாங்கமே?
மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் எச்.ஐ.வி நோய் பரப்பப்பட்ட கர்ப்பிணிப்பெண் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.
சாத்தூர் அரசு மருத்துவமனையில் 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடலில் சிவப்பு அணுக்கள் குறைவாக இருந்ததால், அவருக்கு ரத்தம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி வாலிபர் ஒருவரிடம் தானமாக பெறப்பட்ட ரத்தம் கர்ப்பிணிப் பெண்ணிற்கு செலுத்தப்பட்டது.
இதற்கிடையே அந்த வாலிபர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அந்த கர்ப்பிணிப் பெண்ணும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளார். இது முழுக்க முழுக்க மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே. இவர்களின் கவனக்குறைவால் பாவம் அந்த அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளது. இது சம்மந்தமாக 3 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண். ஒரு பாவமும் செய்யாத என்னை இப்படி செய்துவிட்டார்கள். என்னை எல்லாரும் கேவலமாக பார்க்கிறார்கள். எல்லாரிடமும் போய் நான் நல்லவள் என கூற முடியுமா? இதுக்கு பேசாமல் என்ன விஷ ஊசி போட்டு கொன்றிருக்கலாம் என அவர் கண்ணீர் மல்க கூறினார். அந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் அரசு வேலை கொடுப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதை செய்தால் அவருக்கு வந்திருக்கும் நோய் போய்விடுமா உயர் திரு அரசாங்கமே? யார் இதற்கு பொறுப்பேற்பார்கள்?