செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 1 ஜனவரி 2021 (11:48 IST)

2 ஆம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு !

தமிழகத்தில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு வரும் 5 ஆம் தேதி முதல் நடைபெறும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நீட் எனப்படும் மருத்துவக் கல்விக்கான நுழைத்தேர்வை தேசம் முழுவதிலுமிருந்து பல லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதினர்.

இந்நிலையில், 7.5 இட ஒதுக்கிட்டில்  தமிழகத்தில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு வரும் 5 ஆம் தேதி முதல் நடைபெறும் என  மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலாளர்அறிவித்துள்ளார்.

மேலும், கட்டணம் செலுத்த முடியாததால் மருத்துவப் படிப்பைத் தேர்வு செய்யாத அரசுப் பள்ளி மாணவர்களும் இக்கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.