செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified திங்கள், 26 செப்டம்பர் 2022 (09:37 IST)

வாகன ஓட்டிகளே.. இனி பாட்டிலில் பெட்ரோல் கிடையாது! – அதிர்ச்சி அறிவிப்பு!

PETROL
தமிழ்நாட்டில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இனி பாட்டிலில் பெட்ரோல் தரப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் வீடுகள், வாகனங்கள் மீது மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை குற்றவாளிகளை தேடி கைது செய்து வருகிறது. இந்த சம்பவங்களால் தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் காலி பாட்டில்கள் மற்றும் கேன்களில் பெட்ரோல் நிரப்பு தரப்படாது என தமிழ்நாடு பெட்ரோல் வணிக சங்கம் அறிவித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.