வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2016 (18:12 IST)

பெட்ரோல் இப்பவே போட்டுக்குங்க... செப்டம்பர் 16ம் தேதி ஸ்டிரைக்

பெட்ரோல் இப்பவே போட்டுக்குங்க... செப்டம்பர் 16ம் தேதி ஸ்டிரைக்

காவிரி நீர் தொடர்பாக, தமிழகத்தில் வருகிற 16ம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்தில், பெட்ரோல் பங்குகளும் பங்கேற்பதால் அன்று பெட்ரோல் கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 
காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடுவது தொடர்பாக, கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக போராட்டம் வெடித்து. தமிழர்கள் குறிவைத்து தாக்கப்பட்டார்கள். தமிழர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 50 பேருந்துகள் மற்றும் 10 லாரிகளுக்கும் மேல் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
 
எனவே, உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவின் படி, தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வலியுறுத்தியும், கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக நடந்துவரும் வெறியாட்டங்களை கண்டித்தும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கும் வருகிற 16ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
 
இந்த முழு அடைப்புக்கு, இதுவரை திமுக, பாமக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 
 
இந்நிலையில், இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளும் பங்கு கொள்கிறது என்று தமிழ்நாடு பெட்ரோல் வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.பி.முரளி கூறியுள்ளார்.
 
தமிழகத்தில் உள்ள சுமார் 4600 பெட்ரோல் பங்குகள் அன்று மூடப்படுவதால், வாகன ஓட்டிகள் முன்கூட்டியே பெட்ரோல் போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.