வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (06:38 IST)

இரண்டு நாட்களுக்கு பின் மீண்டும் அதிகரித்த பெட்ரோல் டீசல் விலை!

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக அதாவது ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரண்டு நாட்களிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு இல்லாமல் அதே விலையில் விற்பனை ஆகி வந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மீண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
பெட்ரோல் விலை இன்று சென்னையில் 31 காசுகள் உயர்ந்து 92.90 ரூபாய் என விற்பனையாகி வருகிறது. அதே போல் டீசல் விலை 33 காசுகள் விலை உயர்ந்து 86..31 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் முப்பது காசுக்கு மேல் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராஜஸ்தான் உள்பட ஒருசில மாநிலங்களில் பெட்ரோல் விலை 100ஐ தாண்டிவிட்ட நிலையில் வெகு விரைவில் சென்னையிலும் 100ஐ தாண்டும் என்று எதிர்பார்ப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை காரணமாக லாரி வாடகை உயர்ந்துள்ளதால் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது