சென்னையில் பெட்ரோல், டீசல் விலை: 14வது நாளாக மாற்றமில்லை

petrol
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை: 14வது நாளாக மாற்றமில்லை
siva| Last Updated: வெள்ளி, 30 ஜூலை 2021 (09:06 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து கொண்டுவந்தது என்பதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 100ஐ தாண்டியது என்பதும் அதேபோல் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி வந்தது என்பதையும் பார்த்து வந்தோம்

இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூ.102.49 என்ற விலையில் டீசல் விலை 94.39 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. இதே நிலையில் தான் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 14 நாட்களாக விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயராத நிலையில், சென்னையிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியதற்கும், டீசல் விலை 100 ரூபாயை நெருங்கியதற்கும் முக்கிய காரணம் மத்திய மாநில அரசுகள் விதித்த வரிகள் தான் என்றும் அரசுகள் வரியை குறைக்க முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறதுஇதில் மேலும் படிக்கவும் :