திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 17 அக்டோபர் 2022 (07:52 IST)

சரியாக ஐந்து மாதங்கள்.. ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை!

Petrol
கடந்த ஐந்து மாதங்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதும் ஒரே நிலையில்தான் கடந்த 149 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையை விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் இலங்கை வங்கதேசம் ஆகிய நாடுகளில் மிகப்பெரிய அளவில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் ஐந்து மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது பொது மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் பெட்ரோல் டீசலுக்கான வரிகள் அதிகமாக இருப்பதால் மத்திய மாநில அரசுகள் வரிகளை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் நிலையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by siva