புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 ஜூலை 2024 (08:54 IST)

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

Type C Port
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்தியாவில் ஒரே வகையான சார்ஜ் போர்ட்டுகளை கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் ஆண்டுதோறும் பலவகை ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள் பலவற்றிற்கும் சார்ஜிங் பாயிண்டுகள் விதவிதமான வகைகளில் இருப்பதுண்டு. சமீபத்திய காலங்களில் சீன ப்ராண்டுகளான ஓப்போ, விவோ, ரியல்மி, ஷாவ்மி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் அவற்றில் உள்ள TYPE-C சார்ஜிங் பாயிண்டுகள் சார்ஜ் செய்யவும், டேட்டா ட்ரான்ஸ்பர் செய்யவும் மொபைல் பயனாளர்களுக்கு எளிதாக உள்ளது.

பரவலாக பல சார்ஜிங் போர்ட்டுகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் அனைத்து ப்ராண்ட் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், ஐபேடுகள் போன்றவற்றில் பொதுவான சார்ஜ் போர்ட்டாக டைப்-சி போர்ட்டையே பயன்படுத்துவதை கட்டாயமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனக்கென யூஎஸ்பி கேபிள் 3 வகை சார்ஜர்களை பயன்படுத்தி வந்த நிலையில் தனது சமீபத்தில் தனது ஐபேட் மாடல்களில் டைப்-சியை பயன்படுத்த தொடங்கியுள்ளது. இந்நிலையில் அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கும் டைப்-சி போர்ட் இலகுவான பயன்பாட்டுக்கு உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. ஐரோப்பிய யூனியனில் மின்னணு பொருட்களில் பொதுவான சார்ஜிங் போர்ட் கட்டாயமாக உள்ள நிலையில் இந்தியாவில் அவ்வாறான ஒரு நடைமுறை அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K