திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 30 மார்ச் 2021 (10:21 IST)

பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்! – பெரியாரிய அமைப்பினர் கைது!

தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரியாரிய அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. இந்நிலையில் பாஜக சார்பில் தாராபுரத்தில் போட்டியிடும் எல்.முருகன் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி இன்று தாராபுரம் வருகை தர உள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடியை எதிர்த்து கோயம்புத்தூரில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.