திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (13:37 IST)

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கோவில்! – எந்த ஊரில் தெரியுமா?

Kalaingar Temple
முன்னாள் தமிழக முதல்வரான கருணாநிதிக்கு தமிழக கிராமம் ஒன்றில் கோவில் கட்டப்பட்டு வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வராகவும், திமுக கட்சியின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர் கருணாநிதி. உடல்நல குறைவால் இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாக உயிரிழந்த நிலையில் அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே புதைக்கப்பட்டுள்ளது.

அங்கு அவருக்கு நினைவிடம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நாமக்கல் அருகே ஒரு ஊரில் கோவிலே கட்டப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குச்சிக்காடு என்ற கிராமத்தில் அம்மக்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்காக “கலைஞர் பகுத்தறிவு ஆலயம்” என்ற பெயரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக பூஜை செய்து கட்டிட பணிகளை தொடங்கினர்.

தொடர்ந்து கிராம மக்கள் நிதி திரட்டி அந்த கோவிலை கட்டி வரும் நிலையில் நிதி பற்றாக்குறையால் கோவில் பணிகள் முடிவடைய தாமதமாகி வருகிறது. கடவுள் மறுப்பாளராக விளங்கிய கருணாநிதிக்கு அவர் பெயரிலேயே கோவில் கட்டுவது வைரலாகியுள்ளது.