1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 15 நவம்பர் 2018 (17:08 IST)

மெரினாவை காலி செய்யுங்க... 21 கிமீ வேகத்தில் மிரட்டும் கஜா புயல்

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் திசைமாரிய காரணத்தால் கடலூர் மற்றும் பாம்பன் பாலம் இடையே இன்று இரவு 8 முதல் 11 மணிக்குள் கரையை கடக்க இருக்கிறது. 
 
புயலால் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுட வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்தது.
 
இந்நிலையில், கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், காரைக்கால் ஆகிய புயல் பாதிப்புள்ள பகுதிகளில் இன்று மாலை 6 மணியில் இருந்து நாளை காலை 6 மணி வரை பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. 
 
இதற்கு முன்னர், பாதிப்புள்ள மாவட்டங்கலில் பணிபுரியும் தனியார் மற்றும் அரசு ஊழியர்களை 4 மணிக்குள் வீட்டிற்கு அனுப்பும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியான தகவலின்படி புயலின் வேகம் 25 கிமீ ஆக அதிகரித்துள்ளதால், இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் புயல் கரையை கடக்கும். தற்போதைய நிலையில் 21 கிமீ வேகத்தில் புயல் நகர்ந்து வந்த படி உள்ளது. 
 
சென்னைக்கு பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது என குறிப்பிட்டாலும், மெரினா கடற்கரையில் இருந்து மக்களை வெளியேற்றும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.