திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (14:52 IST)

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மக்கள்

kallacurichy
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவி தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சசியை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்குள் புகுந்து தீவைத்தனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து, அப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி பாதிக்கப்பட்டது,எனவே, நேரடி வகுப்புகள் வேண்டும் என்று அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்ததனர்.

அதன்படி, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில்,கட்ந்த மாதம் பள்ளியைத் திறக்க வேண்டும் என்று நீதிமமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது.  இன்று, பள்ளியைச் சீரமைத்து மாணவர்களுக்கு   நேரடி வகுப்புகள் தொடங்க வேண்டும்  பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஒன்றுகூடி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்துள்ளனர்.

இதனால், மீண்டும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.