1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 8 ஜனவரி 2019 (10:01 IST)

இதுக்கு பருத்திமூட்ட குடோன்லயே இருந்திருக்கலாமே!! தேர்தல் ரத்து; தெறிக்கவிடும் நெட்டிசன்கள்

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து குறித்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
வரும் 28ஆம் தேதி திருவாரூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெற இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனால் ஆட்டம் கண்டுபோன கட்சிகள், கஜா புயல் நிவாரணப் பணிகளை காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தது. 
 
இதுஒரு புறமிருக்க திமுக, அமமுக, நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் வேலைகளை ஆரம்பிக்க இருந்தனர்.
மீண்டும் குட்டையை குழப்ப களமிறங்கிய தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தலாமா வேண்டாமா என அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் கூட்டி முடிவெடுத்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாவட்ட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, அதிமுக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் தற்பொழுது தேர்தல் நடத்துவதற்கு உகந்த சூழ்நிலை அல்ல என கருத்து கூறினர். 
 


























இதனையடுத்து தேர்தல் ஆணையம் திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலை ரத்து செய்து நேற்று உத்தரவிட்டது. இதில் யார் டிராமா ஆடுகிறார்கள். தேர்தல் ஆணையமா? அல்லது அரசியல்வாதிகளா? என்றே புரியவில்லை.
இந்நிலையில் தேர்தல் ரத்தானதை கலாய்க்கும் விதமாக நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சந்தானம் படத்தில் இதுக்கு பருத்திமூட்ட பேசாம குடோன்லயே இருந்திருக்கலாமே என்ற டைலாக்கை ஒப்பிட்டு பேசி கலாய்த்து வருகின்றனர்.
 
எது எப்படியயினும் மத்திய, மாநில அரசுகளின் இந்த அரசியல் டிராமாக்களுக்கு நடுவே மக்கள் தான் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்.