வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 7 ஜனவரி 2019 (08:21 IST)

டிடிவி தினகரனுக்கு பயந்தே தேர்தல் ரத்து: எஸ்.துரைராஜ் குற்றச்சாட்டு

திருவாரூரில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி வெற்றி பெற்றுவிடும் என்ற பயத்தின் காரணமாகவே இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் வேட்பாளர் எஸ்.துரைராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

திருவாரூர் ஆட்சி தலைவரிடம் கலந்தாலோசித்து, தேர்தல் நடத்தும் சூழல் இருக்கிறது என்பதை தெரிந்து பின்னரே தேர்தல்க் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்தது. ஆனால் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும், டெபாசிட் பறிபோகும் அளவிற்கு அங்கு நிலைமை இருப்பதும், அமமுக வேட்பாளர் வெற்றி பெற்ருவிடுவார் என்று பயந்துமே தேர்தலை ஒத்திவைப்பதற்கு காரணம் என நாங்கள் எண்ணுகிறோம்.

டிடிவி தினகரன் கஜா புயல் பாதித்த திருவாரூர் மாவட்ட மக்களிடம் நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு ஏராளமான நிவாரண உதவிகளை செய்துள்ளார். அந்த தொகுதி மக்கள் தேர்தல் வேண்டும் என்றே விரும்புகின்றனர்.  இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் தான் தேர்தல் வேண்டாம் என கூறி வருகின்றன என்று அமமுக வேட்பாளர் துரைராஜ் கூறியுள்ளார்.