சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?
சென்னை கிண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்து விட்டதாகவும் மருத்துவர்கள் இல்லாததால் இளைஞர் உயிரிழந்து விட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி வாக்குவாதம் செய்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் வயிற்று வலியால் இளைஞர் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் சிகிச்சைக்கு முன்பே அவர் உயிரிழந்து விட்டதாக சற்று முன் செய்தி வெளியாகியுள்ளது. மருத்துவர் இல்லாததால் உயிரிழந்து விட்டதாக இளைஞரின் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மருத்துவர்கள் போராட்டத்திற்கு சென்றதால் சிகிச்சை அளிக்க வரவில்லை என்றும் அதனால் தகுந்த சிகிச்சை கிடைக்காததால் விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்து விட்டதாகவும் எமர்ஜென்சி வார்டில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை அளிக்க எந்த மருத்துவரும் வரவில்லை என்றும் புகார் அளிக்க கூறப்பட்டு வருகிறது.
முன்னதாக சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையின் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran