செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 19 செப்டம்பர் 2024 (16:52 IST)

நாடு முழுவதும் 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது: முக்கிய அறிவிப்பு..!

india passport
தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக நாடு முழுவதும் 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என மதுரை பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் அறிக்கை  வெளியிட்டுள்ளார். செப்.20ம் தேதி இரவு 8 மணி முதல் 23ம் தேதி காலை 6 மணி வரை பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என மதுரை பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியா முழுவதும் தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக 20.09.2024 இரவு 20.00 மணி முதல் 23.09.2024 காலை 06.00 வரை, பாஸ்போர்ட் சேவை இணையதளம்
தெரிவித்துக்கொள்கிறோம்.

எனவே பாஸ்போரட் என்பதை விண்ணப்பதாரர்கள் அனைத்துவிதமான சேவைகளுக்கும் (பாஸ்போரட் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்வதற்கும் மற்ற சந்தேகங்களுக்கும்) தொழில்நுட்ப பராமரிப்பு முடிந்த பின்பு பாஸ்போர்ட் சேவை இணையதளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

மேலும் விவரங்களுக்கு மண்டல பாஸ்போர்ட் அலுவலக தொலைப்பேசி 0452-2521205 மற்றும் 0452-2521204 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Edited by Siva