1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2024 (09:46 IST)

நாகை இலங்கை காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து காற்றழுத்த தாழ்வு நிலை எதிரொலியாக இரண்டு நாட்கள் ரத்து-கப்பல் நிர்வாகம் அறிவிப்பு!

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறை இடையே வாரத்தில் 4 நாள்கள் பயணிகள் கப்பல்  போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் சீற்றம், கனமழை, சூரைக் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு  இருநாள்களுக்கு ரெட் அலர்ட் விடுத்து வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
அதுமட்டுமின்றி மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து பருவநிலை மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  15 -ம் தேதி மற்றும் 17-ம் தேதி ஆகிய இருநாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.