திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (08:35 IST)

உதய சூரியன் இப்போ உதய் சூரியன்! – சூரிய வெளிச்சத்திற்காக பார்த்திபன்!?

தனது படங்களிலும், பேச்சுகளிலும் நூதன பகடியை கலந்து பேசும் இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் திமுக குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாக்களில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி கொண்ட இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தனது பேச்சுகளிலும், எழுத்துக்களிலும் நூதனமான பகடியை பேசக்கூடியவர். சமீப காலமாக படங்களில் நடித்து வந்த இவர் ‘ஒத்த செருப்பு’ போல சில ஆண்டுகளுக்கு ஒருமுறை சில படங்களை இயக்கியும் வருகிறார்.

அரசியல் குறித்து தீவிரமான எந்த கருத்தையும் பேசியிராத பார்த்திபன் தற்போது திமுக குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “உதய சூரியன் உதய் சூரியனாகிறதாம்! சிறுக சிறுக கதிர்கள் பெருக....” என்று பதிவிட்டுள்ளார். சமீப காலமாக திமுகவில் முக்கிய முடிவுகளில் உதயநிதியிடமும் கலந்து ஆலோசிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்த நிலையில் பார்த்திபனின் கருத்து அதற்கு இணையாக உள்ளது. இதனால் பார்த்திபன் திமுக மறைமுக ஆதரவாளரா அல்லது விரைவில் திமுகவில் இணைய போகிறாரா? என்பது போன்ற கேள்விகளும் உலா வரத் தொடங்கியுள்ளன.