வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (19:06 IST)

பரந்தூரிலும் தேர்தல் புறக்கணிப்பு.. 13 பேர் மட்டுமே வாக்களித்ததால் பரபரப்பு..!

ஏற்கனவே வேங்கை வயல் பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு நடைபெற்றது என்பதும் அதேபோல் மதுரை மாவட்டத்தில் உள்ள ஐந்து கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர் என்ற செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் சென்னை அருகே பரந்தூரிலும் தேர்தல் புறக்கணிப்பு நடந்துள்ளதாகவும் அங்கு வெறும் 13 பேர் மட்டுமே தங்களது வாக்களித்து எழுதியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

காஞ்சிபுரம் அருகே பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரும் தேர்தல் புறக்கணிப்பு  நடந்துள்ளது. ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏகனாபுரம், நாகப்பட்டு கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை அரசு ஊழியர்கள் 13 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். ஏகனாபுரம் கிராமத்தில் 1400 வாக்காளர்கள் உள்ள நிலையில், ஒரு வாக்காளர் கூட வாக்களிக்கவில்லை.

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 630 நாட்களுக்கு மேலாக போராடியும் தீர்வு இல்லை என மக்கள் கொண்ட ஆத்திரம் காரணமாக அங்கு யாரும் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran