புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 2 ஜனவரி 2022 (15:08 IST)

8ம் வகுப்பு வரை பள்ளிகள் விடுமுறை; இல்லம் தேடி கல்வி! – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

கொரோனா பரவல் காரணமாக தமிழக பள்ளிகளில் விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் மீண்டும் டெல்டா வகை கொரோனா மற்றும் ஒமிக்ரான் வேகமாக பரவ தொடங்கியுள்ள சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் நாளை தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் விடுமுறையை நீட்டித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை, தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 10ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் 9 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் நடைபெறும் என்றும், இல்லம் தேடி கல்வி திட்டமும் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.