நெல் கொள்முதலுக்கு அதிகாரிக்கு லஞ்சம்: பரபரப்பு ஆடியோ
சிதம்பரம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ள ஆடியோ வைரலாக பரவி வருகிறது.
சிதம்பரம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ள ஆடியோ வைரலாக பரவி வருகிறது.
இதுதொடர்பாக அந்த பகுதி விவசாயிகள், ஒரு மூட்டை நெல் கொள்முதல் செய்வதற்கு ரூ.50 வரை லஞ்சம் கேட்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழக அரசு நெல் மூட்டைகள் உரிய விலைக்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.