புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (21:59 IST)

நெல்லை கண்ணன் பேச மட்டும்தானே செஞ்சார்! அதற்கா கைது? ப.சிதம்பரம்

சமீபத்தில் குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லீம் அமைப்பு ஒன்று கூட்டிய கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பிரமுகர் நெல்லை கண்ணன், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனை அடுத்து அவர் மீது பல்வேறு பகுதிகளில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்
 
கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் நெல்லை கண்ணனின் ஜாமீன் மனு இன்று தள்ளுபடி ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நெல்லை கண்ணன் கைதுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் ஒரு அறிக்கை மூலம் இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் பிரமுகருமான ப.சிதம்பரம் அவர்கள் தனது டுவிட்டரில் நெல்லை கண்ணன் கைதுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:
 
பேசினாலே குற்றம் என்று புதுமையான சட்ட நெறிகள் புகுத்தப்படுகின்றன. பேசுவதே குற்றம் என்று வைத்துக்கொண்டாலும், அதற்கு ஏன் 14 நாள் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க வேண்டும்? இப்படி நினைப்பவர்களை லண்டன் மாநகர் ஹைட் பார்க் (Hyde Park) என்ற பூங்காவிற்கு அனுப்ப வேண்டும். அங்கே பேசப்படுவதை அவர்கள் கேட்க வேண்டும். பேச்சும் செயலும் இணைந்தால் தான் குற்றம். நெல்லை கண்ணன் பேசினார் என்று வைத்துக்கொள்வோம், என்ன தீய செயலை அவர் செய்தார்? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.