வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 15 ஏப்ரல் 2024 (08:48 IST)

நாங்கள் மட்டும் அதை செய்திருந்தால் மோடி இந்நேரம் சிறையில் இருந்திருப்பார்: ப சிதம்பரம்..!

முதலமைச்சர்களை கைது செய்து சிறையில் அடைத்து விட்டு தேர்தல் நடத்திவரும் மோடி அரசு நாங்கள் மட்டும் நினைத்திருந்தால் அப்போதே மோடியை சிறையில் வைத்திருப்போம் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ப சிதம்பரம் முதல்வர்களை கைது செய்துவிட்டு தேர்தல் நடத்தலாம் என்று எங்களுக்கு அப்போது தோன்றவில்லை. 2014 ஆம் ஆண்டு மட்டும் அப்போது எங்களுக்கு தோன்றியிருந்தால் மோடியை நாங்கள் கைது செய்து சிறையில் அடைத்திருப்போம். இந்நேரம் அவர் சிறையில் இருந்து இருப்பார்.

ஆனால் காங்கிரஸ் கட்சி அதை செய்யவில்லை, செய்யவும் விரும்பவில்லை என்று தெரிவித்தார்.  எங்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உண்டு, சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த நாங்கள் விரும்பவில்லை, ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்து வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை

விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகியவற்றை போக்க பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். எனவே காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று சிதம்பரம் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.


Edited by Siva