செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 28 அக்டோபர் 2017 (17:20 IST)

காஷ்மீர் மக்கள் சுயாட்சியை விரும்புகின்றனர். ப.சிதம்பரம்

கடந்த சில நாட்களாக தனது பேட்டிகள் மற்றும் டுவிட்டுகள் மூலம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தற்போது தாஜ்மஹால் குறித்தும் காஷ்மீர் மக்கள் குறித்தும் இளையதளபதி விஜய் குறித்தும் கருத்து தெரிவித்துள்லார்.



 
 
தாஜ்மஹால் பற்றி அவதூறாக பேசுவோர் இந்தியாவின் பன்முக கலாசாரத்தை அறிந்திருக்க மாட்டார்கள் என்றும், காஷ்மீர் மக்களுடன் நான் பேசியதில் பெரும்பாலானோர் சுயாட்சியையே விரும்புகின்றனர் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 
மேலும் இளையதளபதி விஜய் குறித்து அவர் கூறியபோது, 'ஜோசஃப் விஜய்' என்ற மத அடையாளத்தை பெருமையாக கூறிய விஜய்க்கு தான் பாராட்டு தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.