1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 28 அக்டோபர் 2017 (16:58 IST)

கமல் களப்பணி எதிரொலி: தானாக முன்வந்து உதவும் கலெக்டர்

நடிகர் கமல்ஹாசன் இன்று எண்ணூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் என்பதும் இதனால் இன்று காலையில் இருந்தே அவர் தலைப்பு செய்திகளில் இடம்பெறுகிறார் என்பதும் தெரிந்ததே.



 
 
இந்த நிலையில் கமலின் களப்பணியை அடுத்து கலெக்டர் சுந்தரவல்லி உடனடியாக அந்த பகுதியில் கொட்டப்படும் சாம்பல் மற்றும் பிற பாதிப்புகள் குறித்து கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
 
கமல் சம்பந்தப்பட்ட கலெக்டரிடம் புகார் கொடுப்பதற்கு முன்னரே தானே முன்வந்து உதவி செய்ய அறிவித்திருக்கும் கலெக்டருக்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார். 
 
தானே முன்வந்து ஆவன செய்ய வாக்குறுதி தந்த ஆட்சியர் சுந்தரவல்லியார்க்கு எண்ணூர் குப்பத்து மக்கள் நன்றியோடு என் நன்றியும் சேரும்' என்று ஒரு டுவிட்டும், சகோதரர் திருமாவளவன் மற்றும்  பொன்னார் போன்றோர்  எனக்களித்த வரவேற்ப்புரைக்கு நன்றி. முன்னோடுவோரின் வாழ்த்துக்கள் என்  ஊக்கத்தை கூட்டுகிறது' என்று இன்னொரு டுவீட்டும் பதிவு செய்துள்ளார்.