1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2017 (09:26 IST)

கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்த ஓவியா....

நடிகர் கமல்ஹாசனுக்கு அரசியலுக்கு வந்தால் அவரை தான் ஆதரிப்பதாக நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.


 

 
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டார் ஓவியா. தற்போது அவர் சில திரைப்படங்களில் நடிப்பதோடு, மக்கள் கலந்து கொள்ளும் பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.
 
நேற்று ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட போது, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
 
அதற்கு பதிலளித்த அவர் “எனக்கு தனிப்பட்டமுறையில் ரஜினியை தெரியாது. ஆனால், ஒரு ரசிகையாக அவரை பிடிக்கும்.  ஆனால், பிக்பாஸ் மூலம் கமலை தனிப்பட்ட முறையில் தெரியும். அரசியல் என்பது தொழில் அல்ல. அது ஒரு சேவை. சிலர் பணம், புகழுக்காக அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால், கமல்ஹாசனிடம் அனைத்தும் இருக்கிறது. எனவே, அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் நல்லது செய்வார். அப்படி அவர் அரசியலுக்கு வந்தால் அவரை நான் ஆதரிப்பேன்” என ஓவியா தெரிவித்தார்.