வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: ஞாயிறு, 17 மே 2020 (14:48 IST)

வஞ்சக வலையில் வீழ்த்தி கொல்லப்பட்ட தொப்புள்கொடி உறவுகளுக்கு எமது வீர வணக்கங்கள். – ராமதாஸ் டுவீட்

இலங்கையில் சிங்கள ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் அப்பாவி தமிழர்கள் லட்சம் லட்சமாகக் கொல்லப்பட்டனர். அதன் நினைவு தினம் இன்று ஆகையால், பாமக நிறுவனம் ராமதாஸ் இதுகுறித்து ட்விட் செய்துள்ளார்.

அவர் தனது  டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது :

இன்று மே 17. தமிழீழத் தீவு குருதி வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்ட நாள். ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொடூரமாக இனப்படுகொலை செய்யப்பட்ட நாள். வஞ்சக வலையில் வீழ்த்தி கொல்லப்பட்ட தொப்புள்கொடி உறவுகளுக்கு எமது வீர வணக்கங்கள் என தெரிவித்துள்ளார்.