வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 5 அக்டோபர் 2020 (11:03 IST)

ரஜினியுடன் கைகோர்க்கின்றாரா ஓபிஎஸ்:? தமிழக அரசியலில் பரபரப்பு!

ரஜினியுடன் கைகோர்க்கின்றாரா ஓபிஎஸ்
அதிமுகவில் கடந்த சில நாட்களாக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. சமீபத்தில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து ஓபிஎஸ் இபிஎஸ் காரசாரமாக மோதிக்கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
மேலும் அக்டோபர் 7 ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ் தான் அறிவிக்கப்பட உள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன
 
முதல்வர் வேட்பாளர் பதவி இல்லாவிட்டால் குறைந்த பட்சம் அதிமுக பொதுச் செயலாளர் பதவியை வழங்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கோரிக்கை ஈபிஎஸ் தரப்பினரால் நிராகரிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் சற்று முன் கீதையின் வரிகளுடன் கூடிய டுவிட்டர் பதிவு செய்த ஓபிஎஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் அதிமுகவில் தனக்கு முதல்வர் பதவி மற்றும் பொதுச் செயலாளர் பதவி கிடைக்காவிட்டால் அவர் ரஜினியுடன் இணையும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது அதே நேரத்தில் டிடிவி உடன் இணையவும் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது 
 
தமிழக சட்டமன்றத்திற்கு இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் நடைபெறவிருக்கும் தமிழக அரசியலில் ஓபிஎஸ்ஸால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது