திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 12 ஜூலை 2018 (17:24 IST)

எடப்பாடி மீது புகார் ; வெங்கய்யாவிடம் ஓ.பி.எஸ் மகன் கூறியது என்ன?

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்தரநாத் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுவை தனியாக சந்தித்து பேசிய விவகாரம் அதிமுக வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 
ஓ.பி.எஸ் தனக்கு பிறகான அரசியல் வாரிசாக அவரது மகன் ரவீந்திரநாத்தை முன்னிறுத்தி வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் ஆகியோர் கலந்து கொள்ளும் அதிமுக விழாக்களில் ரவீந்திராத் தவறாமல் கலந்து கொள்கிறார்.
 
இந்நிலையில், சமீபத்தில் சென்னை வந்த துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவை ரவீந்திரநாத் சந்தித்து பேசினார். அப்போது, முதல்வர் பழனிச்சாமி பற்றி அவரிடம் புகார் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
எடப்பாடி எங்களை மதிப்பதே இல்லை நீங்கள் கூறியதால்தான் என் தந்தை அவருடன் இணைந்தார். ஆனால், முழுக்க முழுக்க கட்சியை அவரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவர் முயற்சி செய்து வருகிறார் என்கிற ரீதியில் பல புகார்களை ரவீந்திரநாத் கூறியதாக தெரிகிறது. அவர் கூறியதையெல்லாம் பொறுமையாக கேட்டு விட்டு அவரை அனுப்பி வைத்தாராம் வெங்கய்யா நாயுடு.
 
தான் தனியாக சென்று இதுபற்றி வெங்கய்யாவிடம் பேசினால் அது சர்ச்சையாகும் என்பதால் ஓபிஎஸ் தனது மகனை அனுப்பி வைத்ததாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.