1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 1 ஜூலை 2018 (21:37 IST)

நாங்கள் செய்தோம் என்று நிரூபித்தால் நாளைக்கே இந்த ஆட்சியை கலைக்கிறேன்: மு.க.ஸ்டாலின்

திமுகதான்  பல முறை ஆட்சியை இழந்துள்ளது.  கருணாநிதி யார் ஆட்சியையும் கலைக்கவில்லை.  அப்படி அவர் கலைத்ததாக நிரூபித்தால்,  நாளைக்கே இந்த ஆட்சியை கலைக்கிறேன் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அதிரடி பேசியுள்ளார்.

 
கரூரில் நேற்று (30-07-18) மாலை., மாணவரணி,  மாநில, மாவட்ட, மாநகர ஆலோசனைக் கூட்டத்தில், தி.மு.க வின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

 கொங்கு மண்டலம் திமுக வலுவில்லாத மண்டலம். இன்னும், 15 இடங்கள் பெற்றிருந்தால் நாம் ஆட்சி அமைத்து இருப்போம். எனவே தான் முதலில் கொங்கு மண்டலத்தில் களையெடுப்பு நடந்து முடிந்திருக்கிறது.

நாளை அல்லது நாளை மறுநாள் தென் மண்டல களையெடுப்பு நடக்கவிருக்கிறது.  ஆகவே, கட்சிக்கு வரலாம், எம்.பி, எம்.எல்.ஏ க்கள், மந்திரிகளாக, ஏன், ஒ.பி.எஸ்., இ.பி.எஸ் எல்லாம் முதல்வர் ஆகும் போதெல்லாம் யார்வேண்டுமானாலும் ஆகலாம் என்றார். ஆகவே, யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம்,

ஆனால் இயக்கத்தை வலுப்படுத்த முடியாது., அப்படிபட்ட ஒரு நல்ல இயக்கம் தான் தி.மு.க தான் என்றதோடு., கட்சிகள் ஏராளமானவைகள் இருக்கலாம், இல்லை கட்சிகள் கூட இல்லாமல், நான் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று கனவுடன் தமிழகத்தில் சுற்றலாம், ஆகவே, நான் அவர்களை பற்றி பேச விரும்ப வில்லை ஏன், என்றால் நான் கலைஞரின் மகன் என்றதோடு., உலகத்திலேயே திமுக மட்டுமே கட்டுப்பாடுடன் இருக்கிறது.

கட்சிக்குள் அதிகம் ஜனநாயகம் உள்ளது. ஆகவே, ஜனநாயகத்தில் கட்டுப்பாட்டை விட்டு, விட்டு தான்., ஆய்விற்கு பிறகு சர்வாதிகாரத்தை கையில் எடுத்தேன். திமுக இளைஞரணியை மிஞ்சும் அளவில் மாணவரணியின் செயல்பாடு இருக்கிறது.

கடந்த 1967 ல் காங்கிரஸ் கட்சியை வீட்டுக்கு அனுப்பியது திமுக., திமுக- அதிமுக மாறி மாறி ஆட்சி அமைந்தாலும் காங்கிரஸ் இன்று வரை ஆட்சிக்கு வர முடியவில்லை. 1949 ல் துவங்கப்பட்ட திமுக, 1957ல் தான் தேர்தலில் போட்டியிட்டது.

ஆனால், இன்று பலர் கட்சி ஆரம்பிக்காமலேயே ஆட்சிக்கு வர வேண்டும் என்றும், ஆனால் தற்போது கட்சி தொடங்குவதற்கு முன்னரே., தேர்தலில் போட்டியிட நினைக்கின்றனர். கட்சி ஆரம்பிக்காமலேயே பூத் கமிட்டிகள் அமைகின்றனர். தேர்தலுக்கு முன்னரே தேர்தல் ஆணைய அங்கீகாரம் கேட்குகின்றனர். அதையெல்லாம் விட தாங்கள் தான் முதல்வர் என்று அறிவிக்கின்றனர்

நடிகர்கள் ரஜினி மற்றும்  கமலையும் மறைமுகமாக சுட்டிக்காட்டினார். மேலும் நீட் தேர்விற்கு எதிராக தி.மு.க என்றும் போராடும் என்றதோடு,. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 100 நாட்கள் போராடி, அமைதி பேரணி நடத்திய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

மேலும் அந்த தூத்துக்குடியில், 13 பேர் சுட்டு கொல்லப்பட்ட ஒரு சம்பவத்திற்கு தலைமை பொறுப்பை பெற்றுள்ள மோடியின் அனுமதி இல்லாமல் இது நடந்திருக்க முடியாது என்றதோடு., 13 பேர் துப்பாக்கி சூட்டில் பலியாகி இருந்திருக்கின்றார்கள்.

அந்த சம்பவத்திற்கு  நமது இந்தியாவின் பிரதமர் மோடி,  நேரில் இங்கே வர வேண்டாம். ஒரு இரங்கலை கூட தெரிவிக்கவில்லை. இதே குஜராத்தில் நடந்திருந்தால் விட்டிருப்பாரா? என்றார். மேலும், காவிரி மேலாண்மை விவகாரம் என்பது எல்லாரும் அறிந்ததே, என்றதோடு, கர்நாடகாவில் தற்போது பொறுப்பேற்றுள்ள

குமாரசாமி 38 எம்.எல்.ஏ க்களை வைத்துக் கொண்டு, ஒரு முதல்வர் ஆகியுள்ளார். ஆனால் நம் தமிழகத்தில் தி.மு.க எம்.எல்.ஏ க்கள் 89 பேர் இருந்தும் முதல்வர் ஆக முடியவில்லை., ஆகவே, இதை சொன்னால் திருப்பி கேட்பீர்கள். நீங்கள் நினைத்திருந்தால் முடித்திருப்பீர்கள். என்று இன்றும் கலைஞர் இருந்திருந்தால் கவிழ்த்திருப்பீரா ? ஆகையால் ஸ்டாலின் ரொம்ப பொறுமை என்று இன்றும் பத்திரிக்கையில் வந்துள்ளது.

ஆகையால் பொறுத்தார் பூமி ஆழ்வார்., மேலும்., தமிழக மக்களிடம் திமுகவின் மீதான நம்பிக்கையை விட தமிழக அரசின் மீதான வெறுப்பு அதிகமாக இருக்கிறது. எப்போது ஆட்சியை கவிழ்ப்பீர்கள்? என்று செல்லுமிடமெல்லாம் கேட்கின்றனர். 

கருணாநிதி எந்த ஆட்சியையாவது கலைத்தார் என்று நிருபித்தால் நாளையே இந்த ஆட்சியை கலைப்பேன். இந்திராகாந்தி அம்மையார் ஆட்சியின் போது எமர்ஜென்சியை எதிர்த்து தீர்மானம் போட்டோம் உடனே, ஆட்சியை கலைத்து விட்டு, சிறையில் இருந்தோம்

மிசா எதிர்ப்பு என்றதோடு, பின்னர் 13 வருடங்கள் கழித்து 1989 ல் ஆட்சிக்கு வந்தோம், அப்போது இரண்டே வருடத்தில் ஆட்சியை கலைத்தோம், இலங்கையில் உள்ள விடுதலைப்புலிகளுக்காகவும், இலங்கையில் உள்ள மக்களுக்காக கருணாநிதி ஆட்சியை கலைத்தார். ஆகவே, இருமுறை ஆட்சியை கலைத்தது தான்.

 
மேலும், இந்திய அளவில் சுதந்திர தினம் மற்றும் குடியரசுத்தினம் ஆகிய இரு தினங்கள் என்று வருடத்திற்கு இருமுறை தேசிய கொடியை ஏற்றும் போது, சுதந்திர தினத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் தான் தேசிய கொடியை ஏற்ற வேண்டுமென்று போராடியவர் தி.மு.க தலைவர் கருணாநிதி என்றதோடு, அவரால் தான் இந்தியாவில் உள்ள பா.ஜ.க, காங்கிரஸ், கம்யூனீஸ்ட் கட்சி முதல்வர்கள் கூட, ஆங்காங்கே உள்ள மாநிலங்களில் அவர்கள் தேசிய கொடியை ஏற்றுகின்றார்கள்.

அதற்கு மூலக்காரணமே, தி.மு.க தலைவர் கருணாநிதி என்று பெருமை படவும், இது தான்  வரலாறு என்றார். மேலும்,. மாதாமாதம் கொடுப்பவர்களுக்கு கொடுத்து விட்டு தான் ஆட்சியை நடத்துகின்றனர். யார் யாருக்கு எவ்வளவு கொடுக்கிறார்கள்? என்று லிஸ்ட் நம்மிடம் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்கள் எல்லாம் சிறை செல்வர். ஆளுநர் மிரட்டுவதை போல ஏழு ஆண்டுகள் அல்ல.. மாநில சுயாட்சிக்காக ஆயுள் தண்டனை கூட பெற தயாராக இருக்கிறேன்.

தமிழக ஆளுநர் அடுத்த சுற்றுப் பயணத்தின் போது நானே சென்று கருப்பு கொடி காட்டவிருக்கிறேன்" என்று பேசினார். மேலும் சிலைகடத்தல் பிரிவு பொன்மாணிக்கவேல் என்பவர் நல்ல அதிகாரி, அவர் இருந்தால் இன்னும் ஏராளமான சிலைகளை கண்டுபிடிப்பார் ஏன் ? அரசு மாற்றியது,. அதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு, மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பிலுக்கு சென்றது ஏன் ? ஆக, ஒரு அதிகாரியை நேர்மையாக சுதந்திரமாக இயங்க முடியாத அவலநிலைக்கு இந்த ஆட்சி இருக்கின்றது. ஆகவே, ஆட்சி நமக்கு முக்கியமில்லை, இந்த இயக்கம் தான் நமக்கு முக்கியம் என்றார்.

                                                                                                                 - அனந்தகுமார்