ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 24 ஜூலை 2018 (20:20 IST)

எதையும் தாங்கும் இதயம்: டெல்லி அவமதிப்பு குறித்து ஓபிஎஸ்

இன்று டெல்லி சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க திட்டமிட்டிருந்தார். அவர் அமைச்சரை சந்தித்ததாகவும், தனது சகோதரர் சிகிச்சைக்கு உதவி செய்த நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்ததாகவும், ஓபிஎஸ் டெல்லியில் பேட்டி அளித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன
 
ஆனால் நிர்மலா சீதாராமன் அலுவலகத்தின் டுவிட்டர் பக்கத்தில் நிர்மலா சீதாராமன், தமிழக துணை முதல்வரை சந்திக்கவில்லை, என்றும் அதிமுக எம்பி மைத்ரேயனை மட்டுமே சந்தித்ததாகவும் பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை என்பது உறுதியாகியது.
 
இந்த நிலையில் உடனடியாக டெல்லியில் இருந்து கிளம்பி சற்றுமுன் சென்னை வந்த ஓபிஎஸ் அவர்களிடம் செய்தியாளர்கள் டெல்லியில் நேர்ந்த அவமதிப்பு குறித்து கேட்டபோது, எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற பேரறிஞர் அண்ணாவின் வரிகளை மேற்கோள் காட்டி தான் டெல்லியில் அவமதிக்கப்பட்டது உண்மை என துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டது போல் கூறினார்