ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 26 ஜூலை 2018 (14:28 IST)

பன்னீர்செல்வம் வேட்டி கட்டிய ஜெயலலிதா: ராமதாஸ் அறிக்கை

ஊழல் வழக்குகளை உடைப்பதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செலவம் வேட்டி கட்டிய ஜெயலலிதா என்று பாமக நிறுவனர் ராதமாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 
ஓபிஎஸ் சொத்து குவிப்பு வழக்கை தமிழக காவல்துறை விசாரணை நடத்தினால் நீதி கிடைக்காது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
 
தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான் சொத்துக்குவிப்பு புகார்கள் குறித்து கையூட்டுத் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அதுகுறித்து தொடக்கக்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
இது பன்னீர்செல்வத்தின் சொத்துகுவிப்புகளை கண்டுபிடித்து தண்டிப்பதற்கான நடவடிக்கை அல்ல. சிபிஐ விசாரணையில் இருந்து பன்னீர்செல்வம் குடும்பத்தினரை காப்பாற்றும் முயற்சி என்பதே உண்மை.
 
ஊழல் வழக்குகளை ஓ.பன்னீர்செல்வம் வேட்டி கட்டிய ஜெயலலிதா என்று கூறினால் அது மிகையாகாது. திமுக ஆட்சியில் தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கை திமுக ஆட்சியிலேயே சட்டப்படி சாத்தியமற்ற வழிகளிலெல்லாம் வளைத்து நீதியைக் கொன்ற பன்னீர்செல்வம், இப்போது அதிமுக ஆட்சியில் அவரது கட்டுப்பாட்டில் இருந்த கையூட்டு தடுப்புப் பிரிவு விசாரணையில் தண்டிக்கப்படுவார் என்று எவரேனும் நினைத்தால் அதை விட பெரிய அறியாமை எதுவும் இருக்க முடியாது.
 
ஓ.பன்னீர்செல்வம் மீதான் சொத்து குவிப்பு குற்றச்சாற்றுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்துவதுதான் சரியானதாக இருக்கும். அதுமட்டுமின்றி இவ்வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் அப்படி செய்தால் மட்டும்தான் ஊழல் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.