ஓபிஎஸ் மீது விசாரணை: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

Last Modified புதன், 25 ஜூலை 2018 (10:57 IST)
ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு ஒன்றை சமீபத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் ஏற்கனவே கருத்துவேறுபாடு இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் துணை முதல்வருக்கு எதிராக தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுஇதில் மேலும் படிக்கவும் :