1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 26 ஜூலை 2018 (22:11 IST)

அதிசயம் ஆனால் உண்மை: கருணாநிதியை சந்திக்கும் அதிமுக தலைவர்கள்

திமுக, அதிமுக என்றால் எதிர்க்கட்சிகள் என்பதைவிட எதிரிக்கட்சிகள் என்றே கூறும் அளவுக்கு இரு கட்சியின் மேல்மட்ட தலைவர்களில் இருந்து அடிமட்ட தொண்டர்கள் வரை நடந்து கொண்டனர். ஜெயலலிதா, கருணாநிதி பதவிகளில் இருந்தபோது இருதரப்பினர்களுக்குமான விரோதம் அதிகபட்ச அளவில் இருந்தது. 
 
இந்த நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஓரளவு இரு கட்சியினர்களும் அரசியல் நாகரீகத்தை கடைபிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கருணாநிதியின் உடல்நலம் குறித்த செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் சற்றுமுன் அதிமுக அமைச்சர்கள் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரிக்க அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.
 
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி ஆகியோர் கோபாலபுரம் சென்று கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தனர்.. இந்த நிகழ்வு ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.