Daily Horoscope
✕

ஓபிஎஸ்-ஐ ஒதுக்குகிறதா பாஜக? பிறந்த நாளுக்கு கூட வாழ்த்து சொல்லவில்லையே..!

Written By Siva
Updated: புதன், 17 ஜனவரி 2024 (14:07 IST)
பாஜக கூட்டணியில் கண்டிப்பாக ஓபிஎஸ் அணி இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் அவரை பாஜக ஒதுக்கி வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 கடந்த 14ஆம் தேதி ஓபிஎஸ் தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடிய போது பிரதமர் தரப்பில் இருந்தும் அல்லது பாஜகவின் முக்கிய தலைவர்களிடம் இருந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து வரவில்லை.  

மேலும் சமீபத்தில் டெல்லியில் நடந்த பொங்கல் விழாவில் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் ஓபிஎஸ் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்து தான் அண்ணாமலை தனது சமூக வலைத்தளத்தில் ஓபிஎஸ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.  ஓபிஎஸ் தனி அணியாக பாஜக கூட்டணியில் இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் ஆனால் பாஜகவோ ஓபிஎஸ், பாஜகவில் இணைய வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

அதனால்தான் ஓபிஎஸ் அவர்களுக்கு பாஜகவின் முக்கிய தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறவில்லை என்றும் வரும் தேர்தலில் ஓபிஎஸ், பாஜக அணியில் இடம் பெறுவது சந்தேகம் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva

எல்லாம் காட்டு

அடுத்த 5 நாட்களுக்கு கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

நாம் தமிழர் கார்த்திகா கைது ஏன்? - காவல்துறை விளக்கம்!..

நயினார் நாகேந்திரனை கைது பண்ண தில் இருக்கா?!.. கனிமொழி கேள்வி!..

இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வு.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி...

எஸ்.ஐ.ஆர் எதிர்ப்பு போராட்டம்.. நிர்மலா சீதாராமன் கணவர் பங்கேற்பதால் பரபரப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments