வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 17 ஜனவரி 2024 (16:30 IST)

நம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைப் போற்றுவோம் - அமைச்சர் உதயநிதி

udhayanithi stalin
தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இந்த நிலையில், உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை இன்று தொடங்கி வைத்த அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்  ‘’ஏறுதழுவுதல் நம் பண்பாட்டின் அடையாளமாகத் திகழ்கிறது’’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

‘’சங்க காலம் முதல் இந்தக் காலம் வரை ஏறுதழுவுதல் நம் பண்பாட்டின் அடையாளமாகத் திகழ்கிறது.

அந்த வகையில்,  உலகப்புகழ் பெற்ற #மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை உறுதிமொழி வாசித்து கொடியசைத்து தொடங்கி வைத்தோம்.

வாடிவாசலில் இருந்து துள்ளிக்கொண்டு சீறிப்பாயும் காளைகள் - தீரமிகு வீரர்கள் என ஆர்ப்பரித்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நமக்கு உற்சாகத்தையும் - மகிழ்ச்சியையும் தந்தது. 

போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் - காளைகளுக்கும் தங்கக்காசு - தங்க மோதிரம் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கி வாழ்த்தினோம்.

அரசு வகுத்த அத்தனை விதிமுறைகளையும் முறையாக பின்பற்றி ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தி வரும் ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.

நம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைப் போற்றுவோம் – பாதுகாப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.
  arun vijay
நடிகர் அருண் விஜய் ஜல்லிக்கட்டுப் போட்டியை காண நேரில் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.